2026 ஆம் ஆண்டில் திருகோணமலை மாவட்டத்தில் 230 பயனாளிகளுக்கு புதிய வீடுகள்...

2026 ஆம் ஆண்டில் திருகோணமலை மாவட்டத்தில் 230 பயனாளிகளுக்கு புதிய வீடுகள்...

அவற்றில் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் மட்டும் 42 புதிய வீடுகள் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளன. அந்த வீட்டு திட்டங்கள் தொடர்பான பல நிகழ்ச்சிகள் அண்மையில் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர அவர்களின் தலைமையில் நடைபெற்றன.

வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் வழிகாட்டுதல் மற்றும் நிதி ஒதுக்கீட்டின் கீழ், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை "தமக்கே சொந்தமான ஒரு இடம் - அழகான வாழ்க்கை" என்ற கருப்பொருளின் கீழ் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கான மானிய வீடமைப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

அந்தத் திட்டத்தின் கீழ், மூதூரில் 13 பயனாளிகளுக்கு முதல் கட்டமாக காசோலைகள் வழங்கப்பட்டு முடிவடைந்துள்ளது. மேலும், பிரதி அமைச்சரின் தலைமையில் இன்னும் 08 பயனாளிகளுக்கு முதல் தவணை நிதியும் வழங்கப்பட்டது.

நடுத்தீவு மற்றும் மேன்காமம் கிராம சேவையாளர் பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட இரு பயனாளிகளுகளின்  வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும், சாபிநகர் கிராம சேவையாளர் பிரிவில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த ஒரு வீட்டை பயனாளியிடம் ஒப்படைக்கும் நிகழ்வும் அதே நிகழ்ச்சியுடன் இணைந்து நடைபெற்றன.

வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலும் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த 02 வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, புதிய ஒரு வீட்டிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் பிரதி அமைச்சரின் தலைமையில் நடைபெற்றது.

இந்த அனைத்து வீடமைப்பு திட்டங்களும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

No Comments

Leave a comment

Error! There was an error sending your message.
Thank you! Your comment will be published after review by admin.