மன்னார் மாவட்டத்தில் வீடற்ற 199 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 2026 ஆம் ஆண்டில் புதிய வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

மன்னார் மாவட்டத்தில் வீடற்ற 199 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 2026 ஆம் ஆண்டில் புதிய வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.​அவற்றில் 101 வீடுகளின் கட்டுமானப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 98 வீடுகளை நிர்மாணிப்பதற்கான அனுமதியும் கிடைத்துள்ளது.​இவ்வாறு அனுமதி வழங்கப்பட்ட மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கான முதற்கட்ட காசோலைகள் வழங்கும் நிகழ்வு கடந்த 18ஆம் திகதி நடைபெற்றது.​வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு. எம். ஜெகதீஸ்வரன் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.​இந்த விசேட நிகழ்விற்கு இணையாக, புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது.

​இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட செயலாளர் கே. கனகேஸ்வரன், திட்டமிடல் பணிப்பாளர் எம். ஹலீம்தீன், பிரதேச செயலாளர்கள், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மன்னார் மாவட்ட முகாமையாளர் சஜேகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

No Comments

Leave a comment

Error! There was an error sending your message.
Thank you! Your comment will be published after review by admin.